Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சி.பி.எம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார்?

சி.பி.எம்

கோவையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகம் காந்திபுரம் 100 அடி சாலையில் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தின் மீது இன்று (ஜூன் 17) காலையில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில், அலுவலகத்தின் ஜன்னல் மற்றும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் சேதமடைந்தன. இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தியிடம்  பேசினோம்.

“எங்கள் கட்சியின் கார் ஓட்டுநர் ஆனந்த், இன்று காலை ஆறரை மணியளவில் நடைப்பயிற்சி போய்விட்டு, எங்கள் அலுவலகம் பக்கமாக வந்துள்ளார். அப்போது, அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, அலுவலகமும், காரும் சேதடைந்திருப்பதைப் பார்த்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், உடனே எனக்குத் தகவல் தெரிவித்தார். குண்டுவீச்சு நடந்தபோது, யாரும் அங்கு இல்லாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை” என்றார். 

இது தொடர்பாக, காவல்துறையிடம் மார்க்சிஸ்ட் கட்சியினர் புகார் அளித்தனர். காவல் துறையினர், சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த காலத்தில், கோவை மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்டபோதெல்லாம் மக்கள் ஒற்றுமைக்காகவும், மத நல்லிணக்கத்துக்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளப்பரிய பங்காற்றியுள்ளது. கோவை மாவட்டத்தில் மக்கள் ஒற்றுமையையும், அமைதியையும் குலைக்க விரும்பும் சக்திகள், சமீபகாலமாக அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.கோவையில் சமீபகாலமாகத் தலைதூக்கியுள்ள இத்தகைய வன்முறை நடவடிக்கைக்கு தமிழக அரசும், காவல்துறையும் முடிவுகட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்  யெச்சூரியைத் தாக்குவதற்கான முயற்சி டெல்லியில் நடந்தது. அதைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டு, கொடிக்கம்பங்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மு. நந்தினி

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close