Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராமநாதபுரத்தில் கடலுக்கு மணலணை கட்டிய அதிகாரிகள்...

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்றார் பாரதி. அவரது சொல்லை மீறக் கூடாது என நினைத்த அதிகாரிகள் மண்ணால் அணை கட்டி கடலுக்கு தடுப்பு சுவர் கட்டியிருக்கிறார்கள். 


ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடற்கரையோர கிராமம் சின்னப்பாலம். நாட்டுப்படகுகள் மூலம் மீன் பிடிப்பதையும், கடலில் இறங்கி பாசி சேகரிப்பதையும் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வரும் மீனவர்கள் நிறைந்த பகுதி. காற்றடி மற்றும் மழைக் காலங்களில் கடல் நீர் பெருக்கெடுத்து கரையோரம் உள்ள மீனவ குடிசைகளுக்குள் குடி கொண்டு விடும். இதனால் இக்காலங்களில் மீனவர்கள் தங்கள் குழந்தைகளுடன் உண்ண உறங்க இடமின்றி தவிப்பது வாடிக்கையாக இருந்து வந்தது. இந்த தவிப்பை தவிர்க்க கரையோரம் தடுப்புச் சுவர் அமைக்க ராமநாதபுரம் தொகுதி எம்எல்ஏ நிதியில் இருந்து ரூ.43.40 லட்சம் ஒதுக்கப்பட்டது.


ஆக்ரோஷத்துடன் பொங்கி வரும் கடல் நீரை தடுக்கும் வகையில் ஜல்லிக்கல், சிமென்ட், ஆற்றுமணல் ஆகியவற்றால் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்க மதிப்பீடு தயார் ஆனது. மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்ட கட்டுமானப் பொருட்களுக்கு பதிலாக கடற்கரை மணல், சவுட்டு மணல், குறைவான சிமென்ட் ஆகியவற்றை கொண்டு "மணல் தடுப்பு" அமைத்திருக்கிறார்கள். இந்த தடுப்புச் சுவர் பணிகள் முடிந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் கடற்கரை உப்பு காற்றினாலும், அதன் மீது ஏறி விளையாடும் சிறுவர்களாலும் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே கரைந்து போய் உள்ளன. 


கடல் நீரை தடுக்க கட்டப்பட்ட இந்த தடுப்புச் சுவர் முறையாக கட்டப்படாத நிலையில் அமைச்சர் மணிகண்டனால் கடந்த வாரம் மீனவ மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த தடுப்புச் சுவரின் தரம் குறித்து  வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டதற்கு அவரோ "நல்ல முறையில் சுவர் கட்டப்பட்டுள்ளது. அதன் தரம் குறித்து யாரும் புகார் சொல்லவில்லை" என்கிறார்.

 

ஒதுக்குபுறமாக வாழும் விழிம்பு மக்கள் எதையும் கேட்க மாட்டார்கள். எதைக் கொண்டும் எப்படியும் கட்டலாம் என நினைக்கும் அதிகாரிகளும் அதனைக் கண்டும் காணாதும் இருக்கின்ற அமைச்சரும் உள்ள வரையில் மக்கள் நல திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் இது போன்று மண் அள்ளிப் போடும் பணிகள் நடந்து கொண்டேதான் இருக்கும் போல.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close