Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று  (ஜூன் 18-ம் தேதி) முதல் துவங்குகிறது.

ரெயில்

தீபாவளி பண்டிகை அக்டோபர் 18 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் பிற மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகைக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதில் பெரும்பாலானோர் பண்டிகை நேரங்களில் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். அதனால் தீபாவளி, பொங்கல் மற்றும் பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு எப்போதும் கூட்டம் அலை மோதும்.  

ரெயில் டிக்கெட் முன்பதிவு

டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், இன்று (18 ஆம் தேதி) முதல் தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்க இருக்கிறது. சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தீபாவளி சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதல் ரயில்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close