Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'நம்ப வைத்து ஏமாற்றிய அரசு'! ஆவேசத்தில் போக்குவரத்து ஊழியர்கள்

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகச் சொன்ன அரசு அதற்கு மாறாக அவர்களைப் பழிவாங்கும் விதத்தில் நடந்துகொண்டிருப்பதாக ஊழியர்கள் கொதித்துள்ளனர். 

போக்குவரத்து

ஊதியம், அகவிலைப்படி உயர்வு, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையைக் கொடுத்தல் உட்பட மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மே மாதம் 14, 15, 16 தேதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அந்த மூன்று நாள்களும் தமிழகம் முழுவதும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

பின்னர் அமைச்சர்கள் போக்குவரத்து துறை சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும், ஊழியர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றும் உறுதியளித்தனர். அதன் பிறகே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் செய்தனர்.

இந்நிலையில் அமைச்சர்கள் சொன்ன எதையும் நிறைவேற்றாமல் வேலைநிறுத்தம் செய்ததற்காகப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சேலம், கோவை மற்றும் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம், எஸ்இடிசியில் பணியாற்றும் 500க்கும் மேலான ஊழியர்கள் மீது ஆப்சென்ட், விடுப்பு மறுப்பது மற்றும் பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 
இதனால் போக்குவரத்து ஊழியர்கள் கடும் ஆவேசத்தில் உள்ளனர். இந்த நடவடிக்கையை எதிர்த்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து சங்கங்கள் தெரிவித்துள்ளன. 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close