Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி: ரஜினியைச் சந்தித்த அய்யாக்கண்ணு!

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பயிர்க் கடன் ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு டெல்லியில் 42 நாள்கள் தொடர் போராட்டம் நடத்தினார்.

Rajini Ayyakannu


இதேகோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம், சென்னையிலும் அய்யாக்கண்ணு போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தப்பின் போராட்டம் கைவிடப்பட்டது. அதேபோல் நதிகளை இணைக்க வேண்டும் என்று அய்யாக்கண்ணு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.


நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக முன்பு நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து இருந்தார். இந்நிலையில், ரஜினியை அவரது இல்லத்தில் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயப் பிரதிநிதிகள் சந்தித்தனர். அப்போது நதிகள் இணைப்புக்காக, பிரதமரிடம் ஒரு கோடி ரூபாய் தர அய்யாக்கண்ணு வலியுறுத்தினார்.


இது குறித்து அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம், "நதிகள் இணைப்புக்காக, ஒரு கோடி ரூபாயை பிரதமரிடம்  வழங்கக் கூறினோம். தான் அறிவித்தபடியே, ஒரு கோடி ரூபாய் தருவதாக ரஜினி கூறியுள்ளார். மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, தென் பெண்ணை, பாலாறு, காவிரி ஆகிய நதிகளை இணைக்க வேண்டும் என்று ரஜினி கூறினார். மேலும், போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று ரஜினி கூறினார்" என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close