Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'முதல்வர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால்'.... காவல்துறையை எச்சரிக்கும் ஸ்டாலின்!

ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே கொசஸ்தலை நதியின் குறுக்கே, தடுப்பு அணைக் கட்டும் முயற்சியில் அம்மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தடுப்பு அணை கட்டும் பணிகளை கைவிட வேண்டும் என்று, ஆந்திர முதல்வருக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், வேலூர் மாவட்டம், கங்குந்தியில் ஆந்திர அரசு உயர்மட்ட தரைப்பாலம் கட்டும் பணிகளை, தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.

Stalin


இதுகுறித்து ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், "குப்பம் - கங்குந்தி இடையில் பாலாறு பாயும் 1 கிலோ மீட்டரில் உள்ள தரைப்பாலத்தை மாற்றி, ரூ.4.5 கோடி செலவில் உயர்மட்டப் பாலமாக கட்டும் பணிகளை ஆந்திர அரசு தொடங்கியிருப்பது வேதனைக்குரியது. ஏற்கெனவே வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பாலாறு மற்றும் கொசஸ்தலை ஆகிய ஆறுகள் மூலம் வர வேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டு பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளதால், ஏராளமான நம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் தட்டிக் கேட்டு, நம் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசோ, தங்களுடைய அரசைக் காப்பாற்றிக் கொள்ள குதிரை பேர ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.

இது தரைமட்டப்பாலம் என்று தெரிவித்தாலும், வருங்காலத்தில் தடுப்பணையாக மாற்றப்படும் என்ற அச்சம் விவசாயப் பெருங்குடி மக்களிடம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு  இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதுடன், தமிழக அரசு விழித்துக் கொண்டு செயல்பட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Stalin

அதேபோல, நதி நீர் பிரச்னைகளை கண்காணித்து, உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட ‘நதி நீர் பாதுகாப்பு கமிட்டி’ ஒன்றை அமைக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, அந்தப் பணியையும் உடனடியாக மேற்கொண்டு இதுபோன்ற சூழ்நிலைகளைத் தடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


இதனிடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பணப்பட்டுவாடா செய்த புகாருக்காக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், "பணப்பட்டுவாடா செய்த முதல்வர் எடப்பாடி உள்ளிட்டோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்து நீண்ட நாள்கள் ஆகியும், காவல்துறை இன்னும் வழக்குப் பதியவில்லை தேர்தல் ஆணையத்தின் உத்தரவை, மாநகர காவல் ஆணையர் நிறைவேற்றத் தவறினால் தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்படும்" என்று கூறியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close