Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொது அறிவு கேள்விகளால் நிரம்பி வழிந்த யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வு! 

இந்த ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டு எழுதினார்கள். இந்த ஆண்டு முதல் நிலை தேர்வில் பாடப்புத்தகங்களிலிருந்து அதிகக் கேள்விகள் கேட்காமல் பொது அறிவு சார்ந்த வினாக்கள் அதிகளவில் கேட்கப்பட்டதாகத் தேர்வு எழுதியவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

ஐஏஎஸ் தேர்வு

இந்த முதல்நிலை தேர்வில் 'அரசியல், திரைப்படம், விளையாட்டு, சர்ச்சைகள் போன்ற கேள்விகள் எல்லாம் தவிர்க்கப்பட்டு, நாட்டு நடப்புகள் குறிப்பாக சுற்றுச்சூழல் சார்ந்த வினாக்களும், அரசுத் திட்டங்கள் குறித்தும் அதிகளவில் கேட்கப்பட்டது', எனத் தேர்வு எழுதியவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

ஐஏஎஸ்'இந்த ஆண்டு வினாத்தாளை, இதற்கு முந்தைய ஆண்டு வினாத்தாள்களுடன் ஒப்பிடும்போது மிகவும் மாறி, முக்கியமான மாற்றத்தைக் கொண்டிருந்தது. 100 கேள்விகளில் 96 கேள்விகள் நாட்டு நடப்புக்கான விஷயங்களையே கேட்டு இருக்கிறார்கள். செய்தித்தாள்களை முழுமையாகவும், ஆழமாகவும் படித்திருந்தால் மட்டுமே அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்திருக்க முடியும்', என்றார் மாணவர்களுக்கு இலவசமாக ஆலோசனை வழங்கி வரும் வருமான வரித்துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. 

முதல் நிலைத் தேர்வில் இரண்டு தாள்கள். காலையில் பொது அறிவு சார்ந்த தேர்வும், மாலையில் திறனறிவு சார்ந்த தேர்வும் நடைபெற்றது. இந்தத் தேர்வின் முடிவு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும். திறனறிவு தேர்வில் 33% குறைவில்லாத மதிப்பெண்ணுடன், பொது அறிவுத் தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுபவர்கள் அக்டோபர் மாதத்தில் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு ஐஏஎஸ் குடிமைப்பணிக்கான தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து 70-க்கும் மேற்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close