Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசு... அசத்திய ஜெட் ஏர்வேஸ்! 

நடுவானில் 35,000 அடி உயர விமான பயணத்தின்போது பிறந்த ஆண் குழந்தைக்குப் பரிசாக இலவசமாக ஆயுட்காலம் முழுவதும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பறப்பதற்கான பாஸ் வழங்கி அசத்தி இருக்கிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது நடந்த முதல் பிரசவம் என்பதால் இதை மகிழ்ச்சிகரமான பரிசு என்று அறிவித்திருக்கிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்.  

ஜெட் ஏர்வேஸ்

சவுதி அரேபியாவிலுள்ள டமாம் நகரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (18.06.2017) கொச்சிக்கு ஜெட் ஏர்வேஸ் போயிங் 737 விமானம் 162 பயணிகளுடன் கிளம்பியிருக்கிறது. இந்த ஜெட் ஏர்வேஸ் போயிங் விமானத்தில் நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவரும் பயணம் செய்திருக்கிறார்.

விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. விமானத்தில் விமானப் பணிப்பெண்களும், விமானத்தில் பயணம் செய்த கேரளாவைச் சேர்ந்த செவிலியர் வில்சனும் பிரசவம் பார்க்க கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. உடனே இந்தச் செய்தியை விமான கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்க, விமானம் மும்பையில் தரையிறங்க அனுமதித்து இருக்கிறார்கள். தற்போது, தாயும், சேயும் மும்பை விமான நிலைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இருவரும் நலம் என்று அறிவித்திருக்கிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். எல்லோருக்கும் கிடைக்குமா இது போன்ற பரிசு?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close