Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பணப்பட்டுவாடா விவகாரத்தில் மு.க.ஸ்டாலினை அதிரவைத்த முதல்வரின் விளக்கம்!

MK Stalin

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்த விவகாரத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு, முதல்வர் பழனிசாமி அளித்த பதில் அவரை அதிரவைத்தது.

ஏப்ரல் 12 ஆம் தேதி  நடைபெறவிருந்த ஆர்.நகர். தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிட்ட தினகரனுக்கு வாக்களிப்பதற்காக வாக்காளர்களுக்குத் தலா 4000 ரூபாய்  வீதம் பணம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதற்கு பல ஆதாரங்களும் கிடைத்த நிலையில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.

இந்தநிலையில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர் ஒருவருக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் பணம் விநியோகித்தது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக காவல்துறைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் சட்டப்பேரவையில் இன்று விஸ்வரூபம் எடுத்தது. ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில் தேர்தல் ஆணைய பரிந்துரை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, மு.க.ஸ்டாலினை பேச விடாததால் திமுக  உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணைய பரிந்துரைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டதா எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், போலீஸை கையில் வைத்திருக்கும் முதல்வர் இருந்தால் எப்படி விசாரணை நடக்கும் என்று மு.க.ஸ்டாலின் வினா எழுப்பினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், ஆர்.கே.நகர் விவகாரம் தொடர்பாக முதல்வரே பதிலளிப்பார் என்றும், தேர்தல் ஆணையத்தின் பதிலில் முதலமைச்சர் உள்ளிட்டோர் பெயர் இல்லை என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து விளக்கமளித்த முதல்வர் பழனிசாமி, ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா தொடர்பாகத் தேர்தல் அதிகாரியின் புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், கடந்த தேர்தலில் பணப்பட்டுவாடா தாெடர்பாக திமுகவினர்மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் கூறினார். மேலும், அவையில் ஏதாவதொரு பிரச்னையை ஏற்படுத்தவே திமுகவினர் வருகின்றனர். அவையில் பிரச்னை ஏற்படுத்துவதால் திமுகவினருக்கு ஒன்றும் கிடைக்காது எனக் குற்றம்சாட்டினார்.

முதல்வரின் இந்த விளக்கத்தைக் கேட்டு அதிர்ந்த மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள், முதல்வரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணைய பரிந்துரை பற்றி முன்னரே தகவல் தெரியாது என முதலமைச்சர் கூறுகிறார். இரண்டு மாதத்துக்கு முன்பே வந்த தேர்தல் ஆணையத்தின் அறிக்கை முதலமைச்சருக்குத் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. வழக்குப் பதிவு செய்யுமாறு மே 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்பியுள்ளது. முதல்வர் புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறுகிறார். விசாரணை தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் பதிலளிக்க மறுத்துவிட்டார். பணப்பட்டுவாடா புகார் காரணமாகவே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. முதலமைச்சர், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதவியிலிருந்து விலக வேண்டும்" என்று கூறினார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close