Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூடப்பட்டது 3,000 டாஸ்மாக்... வருமானம் அதிகரித்தது 1,000 கோடி ரூபாய்!

தமிழக சட்டப்பேரவை கடந்த வாரம் கூடியது. அப்போது ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இரண்டு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. அப்போது விதி எண் 110-ன் கீழ் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு அறிவிப்புகளை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

Tasmac


இதையடுத்து, மது விற்பனை குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்கக் குறிப்பில் பல்வேறு தகவல்கள் கூறப்பட்டுள்ளன. அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றவுடன் 500 டாஸ்மாக்  கடைகளை அகற்றுவதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் மேலும் 500 மதுக்கடைகளை மூட எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். 


மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து நெடுஞ்சாலை அருகேயிருந்த ஏராளமான டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. 
இந்நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், "உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய, மாநிலச் சாலை அருகில் 500 மீட்டருக்குள் இருந்த 3,321 டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள் மூலம் 2016-17 ஆம் ஆண்டில், 26 ஆயிரத்து 995.25 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது"  என்று கூறப்பட்டுள்ளது.

இது கடந்த 2015-16 ஆம் ஆண்டைவிட ரூ. 1,149.97 கோடி அதிகம். 3,321 டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டும், ரூ. 1,149.97 கோடி வருமானம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close