Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையிலும் நித்தியானந்தா சீடர்கள்  'அட்ராசிட்டி'

சென்னை பல்லாவரத்தில், ஒரு பெண்ணைப் பார்த்து தவறான சைகை காட்டிய நித்தியானந்தாவின் சீடர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

திரிசூலம், பச்சையம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த வள்ளி என்பவர், தனக்குச் சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தை நித்தியானந்தா ஆசிரமத்துக்கு எழுதி வைத்துள்ளார். இதையடுத்து, நித்தியானந்தாவின் சீடர்கள் அந்த நிலத்துக்குச்  சென்று, கன்டெய்னர் போன்ற ஏசி பொருத்தப்பட்ட வாகனங்களை நிறுத்தியுள்ளனர். மேலும் நிலத்துக்கு வேலி போட்டதோடு, தங்கள்  வாகனத்திலேயே  தங்கியும் இருந்துள்ளனர். இதற்கிடையே, வள்ளி எழுதிக் கொடுத்த நிலத்துக்கு இன்னொருவர் உரிமை கொண்டாடி, நித்தியானந்தா சீடர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தற்போது,  நிலம் யாருக்குச் சொந்தமானது என்று வருவாய்த்துறையினர்ஆய்வுசெய்துவருகின்றனர். 

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர், நேற்று  மனைவியுடன் தெருவில் நடந்து சென்றபோது, நித்தியானந்தாவின் சீடரான கோபி என்பவர்,  ஆனந்தின் மனைவியை நாகரிகமற்ற வார்த்தைகளால் திட்டியதோடு, தவறான சைகைகளையும் காட்டியுள்ளார். இதனால், கோபமடைந்த ஆனந்த், மேலும் பலருடன் வந்து நித்தியானந்தாவின் சீடர்கள் நிறுத்திவைத்திருந்த வாகனங்களை உடைத்துச் சேதப்படுத்தினர்.

பின்னர், பல்லாவரம் போலீஸில் புகார்செய்தார். போலீஸார், கோபியைக் கைதுசெய்து, பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். சில நாள்களுக்கு முன், திருவண்ணாமலையில் குன்றுப்பகுதி ஒன்றை நித்தியானந்தாவின் சீடர்கள் ஆக்கிரமிக்க முயன்றதும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close