Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதலை வாயில் தலையைக் கொடுத்தவர் பட்ட பாடு... சாகச நிகழ்ச்சியில் அதிர்ந்த பார்வையாளர்கள்!

முதலை

தாய்லாந்தில், முதலைப்பண்ணை ஒன்றில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில், பெரும் விபரீதம் ஒன்று நிகழ்ந்தது. தாய்லாந்தின் கிழக்கில் உள்ள தீவுப் பகுதியான கோ சாமு-வில் உள்ளது, இந்த முதலைப் பண்ணை. இங்கு, சுற்றுலாப் பயணிகளுக்கு அதன் பராமரிப்பாளர் ஒருவர் முதலைகளிடம் அருகில் சென்று பயமின்றிச் செய்யும் சாகசங்கள் மிகப் பிரபலம். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், இங்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் இருந்தது. வழக்கமாகச் செய்யும் பல்வேறு சாகசங்களைச் செய்து முடித்த அந்தப் பணியாளர், இறுதி நிகழ்ச்சியாக யாரும் செய்யத் துணியாத நிகழ்ச்சியான முதலையின் வாய்க்குள் தலையை வைத்து எடுக்கும் நிகழ்ச்சிக்குத் தயாரானார்.

ஏற்கெனவே, இதுபோன்ற நிகழ்ச்சி ஒன்றில் தனது இரு விரல்களை இழந்ததாகத் தெரிவித்த அவர், இருப்பதிலே பெரிய முதலைகளில் ஒன்றை வெளியே வரச்செய்தார். வழக்கமாக, வாயைப் பெரியதாக அந்த முதலை திறக்காததால், அதைக் குச்சியால் அடித்து நன்றாகத் திறக்கவைத்தார்.  பின்னர், தன் தலையை 10 விநாடிகளுக்கும் மேலாக முதலையின் வாயில் வைத்திருந்தார். பிறகு தலையை எடுக்க முனைந்தபோது,  முதலை கவ்விக்கொண்டது. அதைப் பார்த்த ஒட்டுமொத்த பார்வையாளர்களும் அதிர்ச்சியில் அலற ஆரம்பித்தனர். எப்படியோ ஒரு வழியாக, தன் தலையை மீட்டு எடுத்தார்.  தன் பிடியை விட்ட அந்த முதலை தண்ணீருக்குள் சென்றுவிட்டது. அந்தப் பணியாளரோ, முகத்தில் ரத்தம் வழிய பயத்தில் உறைந்துபோய் அங்கேயே அமர்ந்திருந்தார். அந்தக் காட்சியைக் காணச்சென்ற பார்வையாளர் ஒருவர், இதைப் படம்பிடித்து வெளியிட்டுள்ளார். 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close