Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிருஷ்ணகிரி தனியார் ஓட்டலிலிருந்து வெளியேறும் கழிவுநீர் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், சின்னார் என்ற இடத்தில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது, அடையாறு ஆனந்தபவன் உணவகம். இந்த ஓட்டல், சின்னார் அணையிலிருந்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு வரும் ஆற்றின் அருகே அமைந்துள்ளதால், ஓட்டலின் சமையல் கழிவுகள், கழிப்பிடக்கழிவுகள் உள்ளிட்டவற்றை தரைப்பாலத்தின் வழியாக அருகிலுள்ள சின்னார் ஆற்றில் கலக்க விட்டுள்ளனர். தற்போது மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால், ஆற்றுக் கால்வாய், தண்ணீரில்லாமல் வறண்டு கிடக்கிறது. இந்த நிலையில், அடையார் ஆனந்தபவன் ஓட்டலிலிருந்து வரும் கழிவுநீர், ஓடையிலேயே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, அதிகளவில் அந்தப் பகுதி மக்களுக்கு நோயைப் பரப்பும் அபாயம் உள்ளது. 

கழிவுநீரை ஆற்றில் கலக்க விடும் அடையார் ஆனந்தபவன் ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அந்தப் பகுதி மக்கள், கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை தொடர்ந்து புகார் கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனக் கூறுகின்றனர். இதையும் மீறி அங்கு வரும் அதிகாரிகள், பெயரளவுக்குப் பார்த்துவிட்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சென்றுவிடுகின்றனர் என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மழைக்காலம் வரும் முன்னே இந்த ஆற்றிலுள்ள கழிவுநீரை அகற்றாவிட்டால், மழைநீரும் கழிவுநீரும் சேர்ந்து கலந்து, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்குச் செல்லும் ஆற்றின் ஓரத்திலுள்ள விவசாயங்கள் பாதிக்கப்படும் . உடனடியாக சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தினர் அகற்றாவிட்டால், கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வரும் 23 ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close