Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்களுக்குச் சம்பளம் உயர்த்தி உத்தரவு!

தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்களுக்குச் சம்பளம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி வெளியிட்டார். 

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு வாணிபக் கழகத்தில் 26,679 சில்லறை விற்பனைப் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் தொகுப்பு ஊதிய முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பணியாளர்களுக்கு தொகுப்பு ஊதியம் 2011 முதல் 2016 வரை ஆறு  ஆண்டுகளாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வாணிபக் கழகத்தின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு மாதத் தொகுப்பு ஊதியம் முறையே ரூ.500, ரூ.400 மற்றும் ரூ.300 என உயர்த்தி வழங்கப்படவுள்ளது. இந்த ஊதிய உயர்வுகள், செப்டம்பர் மாதம் 2017 முதல் நடைமுறைப்படுத்தபடும். இதனால், டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் 7,203 மேற்பார்வையாளர்களும் 15,744 விற்பனையாளர்களும் மற்றும் 3,732 உதவி விற்பனையாளர்களும் பயன்பெறுவர். இதற்காக ஆண்டொன்றுக்கு ரூ.1,322 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close