Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#MLAsForSale: சபாநாயகர், தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் அதிரடி உத்தரவு!

கடந்த பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா அணிகளாக அ.தி.மு.க பிரிந்திருந்தது. அப்போது, கூவத்தூரிலிருந்த அ.தி.மு.க எம்எல்ஏ-க்களுக்கு இரு அணியினரும் கோடிகளில் பேரம் பேசியதாக வெளியான வீடியோவை, 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி வெளியிட்டது.

இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதேபோல பேரவைக் கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க குரல் எழுப்பிவருகிறது.

மேலும், பேரம் பேசியதாக எம்எல்ஏ., சரவணன் கூறும் வீடியோ ஆதாரத்தை, சபாநாயகர் தனபாலிடம் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதையொட்டி, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை ஸ்டாலின்  சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது, 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ ஆதாரத்தையும் ஆளுநரிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.  

இதையொட்டி, ஸ்டாலினின் புகாருக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, வித்யாசாகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். சபாநாயகர் மற்றும் தலைமைச் செயலாளர், இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close