Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரண்டு ஆண்டுகளில் பொறியியல் படிப்புக்குத் தேசிய அளவில் தகுதித் தேர்வு

இந்த ஆண்டு மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்குத் தேசிய அளவில் தகுதித்தேர்வை நடத்தி இருக்கிறது மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொறியியல் படிப்புக்குத் தேசிய அளவில் தகுதித்தேர்வை நடத்தத் திட்டமிட்டு இருக்கிறது மத்திய அரசு. 

பொறியியல்

'இந்த ஆண்டே அனைத்துப் பொறியியல் கல்லூரிகளுக்குச் சேர்த்து ஒரே நுழைவுத்தேர்வு நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஒப்புதல் வழங்கி விட்டது. சில மாநிலங்களில் தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் நடைமுறைக்குக் கொண்டு வரவில்லை. தற்போது, மாநில அரசுகளுடன் இது குறித்து விவாதித்து வருகிறோம். மாநில அரசின் நம்பிக்கையோடு 2019-2020 கல்வியாண்டில் பொறியியல் படிப்புக்கு நாடு முழுவதும் ஒரே தகுதித்தேர்வு அறிமுகப்படுத்தப்படும்' என்று சொல்லி இருக்கிறார் ஏஐசிடிஇ அமைப்பின் தலைவர் அனில் டி சாகஸ்ரபுது.

பொறியியல் படிப்பு'ஏஐசிடிஇ சில திட்டங்களைப் பொறியியல் கல்லூரிகளில் அறிமுகப்படுத்த முனைந்துள்ளது. இதில் கிராமப்பகுதியில் இருந்தும், மாநில மொழிகளில் படித்து பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் மாணவர்களுக்குத் தனி பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம், மாணவர்களின் ஆங்கில அறிவையும், உயர் கல்வி முறைகளும் மேம்படுத்தப்படும். இதைப்போன்றே, பொறியியல் கல்லூரியில் புதியதாக வேலைக்குச் சேரும் விரிவுரையாளர்களுக்கும் நான்கு முதல் ஆறு வாரக் கால பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறோம். மேலும், பொறியியல் படிப்பில் கேள்வித்தாள்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்' என்றும் சொல்லி இருக்கிறார் அனில் டி சாகஸ்ரபுது. 

மாற்றங்கள் மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இருந்தால் நல்லதுதான். 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close