Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நூலகங்கள் மூலம் நூதனப் பிரசாரம்... பா.ஜ.க-வின் 'திராவிட' வியூகம்!

அமித் ஷா

தமிழகத்தில் பேசிப்பேசியே ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகள், எழுதிஎழுதியே இன்றுவரை இயக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. ஆனாலும், அண்ணா நூற்றாண்டு நூலகம் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. அதுதான், கொள்கைகளை மிஞ்சிய 'திராவிட' அரசியல். மாநிலக் கட்சியின் இந்த வழிமுறைகளைத் தேசியக் கட்சியான பா.ஜ.க இப்போது கையிலெடுத்திருக்கிறது. 
அதன்படி, பா.ஜ.க வளர்ச்சிபெறாத மாநிலங்களில் பா.ஜ.க-வின் சித்தாந்தங்களை மக்களிடையே கொண்டுசெல்லும்பொருட்டு, அது பற்றிய பிராந்திய மொழிகளில் வெளியான நூல்கள் அடங்கிய நூலகங்களை, பா.ஜ.க-வின் தலைமையகம் முதல் மாநிலத் தலைமையகங்கள், மாவட்டத் தலைமையகங்கள் மற்றும் மண்டல அளவிலான தலைமையகங்கள் வரை அமைக்க பா.ஜ.க மேலிடம் முடிவெடுத்துள்ளது. இதன்மூலம், பா.ஜ.க-வின் சித்தாந்தங்களைக் கட்சித் தொண்டர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் கொண்டுசெல்ல முடியும் என நினைக்கிற பா.ஜ.க தலைமை, இவை வெறுமனே நூலகங்களாக மட்டுமன்றி பா.ஜ.க சித்தாந்தங்களின் ஆவணக் காப்பகமாகவும் (டாக்குமென்டேஷன் சென்டர் ) இயங்கக்கூடிய அளவில் இதை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. 

முழுக்க முழுக்க அமித் ஷாவின் செயல்திட்டமான இந்த நூலகங்கள் அமைக்கும் பணிக்கென, தேசியப் பொதுச் செயலாளர் டாக்டர். அனில் ஜெயின் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக தமிழகத்தைச் சேர்ந்த ஆசிர்வாதம் ஆச்சாரி நியமிக்கப்பட்டுள்ளார். 

அமித் ஷா

முதற்கட்டமாக இந்தக் குழு, டெல்லி பா.ஜ.க தலைமை, சத்தீஸ்கர், ஜம்மு - காஷ்மீர் மற்றும் சண்டிகர் மாநிலத் தலைமையகங்களில் நூலகங்களை ஏற்படுத்தியுள்ளது. நூலகங்களைப் பயன்படுத்த கட்சியின் தேசியத் தலைவர் முதல் அமைப்புப் பொதுச் செயலாளர், நிர்வாகிகள், அணிகளின் தேசியத் தலைவர்கள் , அமைச்சர்கள், மாநிலத் தலைவர்கள் , மாநில அமைப்புப் பொதுச் செயலாளர்கள் என முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை வழங்கி, அவர்களை உறுப்பினராக்குவதில் தீவிரமும் காட்டிவருகிறது. விரைவில் தமிழகத்திலும் இந்த நூலகங்கள் அமைக்கும் பணி துவங்கும் எனத் தெரிகிறது. 

 நேற்று இந்தக் குழு, நூலக உறுப்பினர்களுக்கான முதல் அடையாள அட்டையை பா.ஜ.க தலைவர் அமித் ஷாவிடம் வழங்கியிருக்கிறது. பா.ஜ.க-வின் சித்தாந்தம் சென்றடையாத மாநிலங்களில், கட்சியை மக்களிடம் கொண்டுசேர்க்க விறுவிறு வேகம்காட்டிவருகிறது பா.ஜ.க.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close