Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாநகரப் பேருந்துகளில் சிசிடிவி கேமரா!

'பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. குறிப்பாக, மாநகரப் பேருந்துகளில் பயணம்செய்யும் பெண்களுக்குப் பாதுகாப்பு வசதிகள் குறைவு. இதற்காக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் பாதுகாப்புக்காக மாநகரப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்', என்று டெல்லி மாநிலத் தேர்தலில் வாக்குறுதி கொடுத்திருந்தது, ஆம் ஆத்மி கட்சி. 

சிசிடிவி

தற்போது, 'சொன்ன தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா?' என்று காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் கேள்வி கேட்க, மாநகரப் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கவிருக்கிறது, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவை. 

சோதனை ஓட்டமாக 200 மாநகரப் பேருந்துகளில் கேமராக்களைப் பொருத்தியிருந்தார்கள். தற்போது, டெல்லி மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 3,800 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதைத் தவிர, டெல்லி இன்டகிரேட்டட் மல்டி மாடல் சிஸ்டம் அமைப்பின் கீழ் 1,200 கிளாஸ்டர் பேருந்துகள் இயக்கப்படுக்கின்றன. இவை அனைத்திலும் கேமராக்கள் பொருத்தப்படும் என்கிறார்கள், டெல்லி போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாகிகள். 

சிசிடிவி

2015ஆம் ஆண்டிலேயே, டெல்லி மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் தலைவர் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு என்று 103.25 கோடி ரூபாயை ஒதுக்கீடுசெய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி மாநகரப் பேருந்தில் வைஃபை வசதி, சிசிடிவி கேமரா எனத் தொழில்நுட்பத்தைப் புகுத்திவருகிறார்கள். நம்ம ஊரிலும் இந்த வசதிகளெல்லாம் வரும் என எதிர்ப்பார்க்கலாமா?
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close