Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குமரியில் அதிகரித்துவரும் போலிச் சான்றிதழ் விற்பனை!

கல்வியறிவில் குமரி மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. கல்வித் தரத்திலும் முதலிடம் வகிக்கிறது. கல்வித்துறைகளிலும் தன்னிறைவுபெற்ற மாவட்டமாகவும் விளங்கிவருகிறது. இதைப் பயன்படுத்தி, பலரும் ஏமாற்றுத் தொழில்செய்துவருவது தொடர்கதையாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில், அதிக வியாபாரப் பொருளாகப் பார்க்கப்படுவதும் கல்விதான். விற்கப்படுவதும் கல்விதான்.

kumari

அதற்கும் ஒரு படி மேலே போய், போலி கல்விச் சான்றிதழ் விற்றுப் பலர் பணம் சம்பாதிக்கிறார்கள். இவர்களை அரசு கண்டு கொள்ளவில்லை என்பதுதான் வேதனையான விஷயம். குமரியில் போலிச் சான்றிதழ் விற்கும் பணி சூடுபிடித்துவருகிறது. இதனால், கல்வியாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். வெளிநாடுகளில் கட்டட வேலை செய்யும் இளைஞர்கள் குமரிக்கு வரும்போது, போலி கல்வி ஏஜென்ட்டுகளிடமிருந்து பிஇ சிவில் இன்ஜினீயரிங் சர்ட்டிஃபிகேட்களை விலைக்கு வாங்கி அதைப் பயன்படுத்தி, மீண்டும் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, பெரிய கம்பெனிகளில் இன்ஜினீயராகச் சேர்ந்துவிடுகிறார்கள். இதேபோன்று, வெளிநாடுகளில் நர்ஸாக இருப்பவர்கள் விடுமுறைக்காகக் குமரிக்குவரும்போது, பி.எஸ்சி நர்ஸிங் சர்ட்டிஃபிகேட்டை போலிக் கும்பலிடம் வாங்கி, திரும்பவும் வெளிநாடுகளுக்குச் சென்று பெரிய பதவிகளில் சேர்ந்துவிடுகின்றனர்.

fake

வெளிநாட்டில் ஒன்றும் தமிழ்நாட்டில் ஒன்றுமாகப் பலரை ஏமாற்றி, போலிச் சான்றிதழ்மூலம் பணம் சம்பாதிப்பது தொடர்கதையாகி வருகிறது. இதன்மூலம், பலரும் போலிச் சான்றிதழ் கும்பலிடம் பணத்தைக் கொடுத்து வாங்குவதால், போலிச் சன்றிதழ் தொழில் குமரியில் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த போலிச் சான்றிதழ்களுக்காகவே பல கல்வி நிறுவனங்கள் குமரிமாவட்டத்தில் செயல்பட்டு வருகிறதாம். பிஇ சர்ட்டிஃபிகேட்டுக்கு 3 லட்ச ரூபாய், பி.எஸ்சி நர்சிங் சர்ட்டிஃபிகேட்டுக்கு 1 லட்சம் ரூபாய் என படிப்புக்கு ஏற்ற ரேட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கு இந்திய மாநிலங்களில் செயல்பட்டுவரும் சில யுனிவர்சிட்டி சார்பிலும், வட கிழக்கு மாநிலங்களில் இயங்கிவரும் அரசு யுனிவர்சிட்டிகள் சார்பிலும் இந்த போலிச் சான்றிதழ்கள் விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கெனவே, கல்வியின் மாண்பு அதலபாதாளத்துக்குப் போய்க்கொண்டிருக்கும் நிலையில், போலிச் சான்றிதழ் பலரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close