Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிஇ படிப்புக்கான ரேண்டம் எண் வெளியீடு! அண்ணா பல்கலை இணையதளத்தில் பார்க்கலாம்

பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண்ணை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில் 17 அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், 10 அரசு பொறியியல் கல்லூரிகள், 3 அரசு உதவிபெறும் கல்லூரிகள் உட்பட மொத்தம் 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பி.இ., பி.டெக். படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொதுக் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 451 பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இன்று ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் ரேண்டம் எண்ணை இன்று வெளியிட்டார். https://www.annauniv.edu/ என்ற அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் ரேண்டம் எண்ணைத் தெரிந்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மருத்துவ சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. cbseresults.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close