Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருணைக்கொலை செய்துவிடுங்கள்! 70 வயது மூதாட்டி கலெக்டரிடம் மனு

 

முதுமை


'இந்தியாவில் 44 சதவிகித முதியோர்கள் பொது இடங்களில் இழிவுபடுத்தப்படுகின்றனர்' என்று சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் நாராயணன், சமீபத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் கூறினார். முதுமை என்பது பொது இடங்களில் மட்டுமல்ல குடும்பங்களிலும் நிராகரிக்கப்பட்டேவருகிறது. இவர்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகள், முதுமையை எட்டும் உறவுகளைக் கைவிடும் சம்பவங்கள் தினமும் அரங்கேறிவருகின்றன.

கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கிடைக்காததால், விருதுநகரைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ராக்கம்மாள், தன்னை கருணைக்கொலை செய்துவிடும்படி மாவட்டக் கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளார். இவரது கணவர், மின்சார வாரியத்தில் வேலைபார்த்து ஓய்வுபெற்றுள்ளார். ராக்கம்மாள், 2015ஆம் ஆண்டில் சிவகாசி நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டு வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், '2017 ஜனவரி முதல் மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது. ஆனால், இன்றுவரை ஜீவனாம்சம் வரவில்லை என்பது ராக்கம்மாளின் ஏக்கமாக உள்ளது. கணவரும் குழந்தைகளும் கைவிட்ட நிலையில் வாழ வாழியின்றி, மூதாட்டி தன்னைக் கருணைக்கொலை செய்துவிடும்படி கூறுவது வேதனை அளிக்கிறது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close