Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யோகா பயிற்சியாளர்களுக்கு அடிக்கப்போகுது யோகம்! 

இந்தியா மட்டுமன்றி, தெற்காசிய நாடுகளிலும் யோகாவுக்கான மவுசு அதிகரித்துவருகிறது. இந்தியாவிலிருந்து சீனாவுக்கு இதுவரை 3 ஆயிரம் யோகப் பயிற்சியாளர்கள் சென்றிருப்பதாகத் தொழில்துறை அமைப்பான அசோசெம் தெரிவித்துள்ளது. சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்கள், மக்கள் மனதில் யோகா பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், கார்ப்பரேட் நிறுவனங்களில் யோகப்பயிற்சி ஓர் அங்கமாக மாறிவருகிறது. பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகப்பயிற்சி அளிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் யோகப் பயிற்சியாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இந்திய அளவில், இப்போதைய சூழலில் 3 லட்சம் யோகப் பயிற்சியாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், 5 லட்சம் யோகப் பயிற்றுநர்களுக்கான தேவை இருப்பதாகவும் அசோசெம் தனது ஆய்வு அடிப்படையில் தெரிவித்துள்ளது. யோகப்பயிற்சி, வாழ்வில் ஒரு பகுதியாக மாறிவரும் இந்தச் சூழலில், முறைப்படி யோகப்பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது. மக்கள், யோகாவுக்குச் செலவுசெய்வதைத் தங்களது ஆரோக்கியத்துக்குச் செய்யும் முதலீடாகக் கருதுவதால், யோகப்பயிற்சி மையங்களுக்கு வரும் காலத்தில் போட்டாபோட்டி நடக்கலாம். வரும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் இனி நம்பிக்கையோடு யோகா பயிற்சியாளராகலாம். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close