Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்திய மோடி!  - குடியரசுத் தலைவர் தேர்தல் கொதிப்பில் தினகரன் #VikatanExclusive

எடப்பாடி பழனிசாமி-மோடி

பா.ஜ.கவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பீகார் மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறார். 'குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்களுடைய ஆதரவைக் கேட்டு பா.ஜ.க வரும் என சசிகலா அணியினர் எதிர்பார்த்தார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் ஆதரவு கேட்டதைத் தினகரன் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. இந்தத் தேர்தலை அடிப்படையாக வைத்து, 'சமரச உடன்பாடு எட்டலாம்' என நினைத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது' என்கின்றனர் கொங்கு மண்டல அ.தி.மு.கவினர். 

குடியரசுத் தலைவர் தேர்தலில், பா.ஜ.க வேட்பாளர் பட்டியலில் சுஷ்மா சுவராஜ், திரௌபதி மர்மு உட்பட பல பெயர்கள் பரிசீலினையில் இருந்தன. ஆனால், 'பிரதமர் மனதில் யார் இருக்கிறார்கள்?' என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. அந்தளவுக்கு வேட்பாளர் தேர்வை படு ரகசியமாக வைத்திருந்து பா.ஜ.க. இதற்குப் பிரதான காரணம், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக குடியரசுத் தலைவர் தேர்தலைப் பார்த்தனர். 'தலித் அல்லது பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக முன்னிறுத்தும்போது, எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கும். பிரதமரின் செல்வாக்கும் உயரும்' எனக் கணக்குப் போட்டார் அமித் ஷா. அதற்கேற்ப, 'தாங்கள் முன்னிறுத்தும் வேட்பாளரை எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும்' என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்தார் ராஜ்நாத் சிங். இந்நிலையில், நேற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளன. 'குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து எங்களிடம் எதுவுமே கூறவில்லை. ஒருதலைப்பட்சமாக ஆளும் கட்சி முடிவு செய்துள்ளது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பாகவே எதிர்க்கட்சிகளிடம் பேசிக் கருத்தொற்றுமையை ஏற்படுத்தியிருக்க வேண்டும்' எனக் கொதித்தார் காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத். சி.பி.ஐ கட்சி நிர்வாகிகளோ, 'ராம்நாத் ஓர் ஆர்.எஸ்.எஸ்காரர். அந்த அமைப்பிலிருந்து யாரை முன்னிறுத்தினாலும் எதிர்ப்போம்' எனக் கடுகடுத்தனர். 

ராம்நாத் கோவிந்த்“பா.ஜ க முன்னிறுத்தியுள்ள வேட்பாளருக்கு எதிராக, அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் கொதிப்பதைப் போலவே, தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளுக்கு எதிராகக் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர் தினகரன் தரப்பினர். 'குடியரசுத் தலைவர் தேர்தலில், பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பது பற்றிக் கட்சித் தலைமை முடிவெடுக்கும்' எனத் தம்பிதுரை கூறிய பிறகு, எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி பேசியதை சசிகலா தரப்பினர் அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர்" என விவரித்த அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர், "குடியரசுத் தலைவர் தேர்தலில், தலித் வேட்பாளரை பா.ஜ.க முன்னிறுத்தியதை சசிகலா தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. 'வேட்பாளராக அத்வானியைத்தான் போடுவார்கள். அவரை முன்னிறுத்தும்போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பைக் காட்டுவதற்கான வாய்ப்பு அதிகம். அப்படியொரு சிக்கல் வரும்போது, நம்மிடம் ஆதரவு கேட்டு பா.ஜ.க தலைமை வரும். இதையே காரணமாக வைத்து, அனைத்து வழக்கு விவகாரங்களிலும் சமசரம் உடன்பாட்டை எட்டிவிடலாம்' என எதிர்பார்த்தார் தினகரன். அவரது நம்பிக்கை நிறைவேறவில்லை.

தினகரன்நேற்று, எடப்பாடி பழனிசாமியிடம் பேசி ஆதரவை உறுதி செய்துவிட்டார் மோடி. இதன்மூலம், அ.தி.மு.க தலைமை என்று எடப்பாடி பழனிசாமியைத்தான் முன்னிறுத்துகிறது பா.ஜ.க. இதை அறியாமல், 'இது எங்களுடைய ஆட்சி. எங்களுடைய கட்டுப்பாட்டில்தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். சசிகலா தலைமையில்தான் உள்ளனர்' எனத் திவாகரன் குடும்பத்தினர் பேசி வருகின்றனர். 'குடியரசுத் தலைவர் தேர்தலில், பா.ஜ.க வேட்பாளரை ஆதரிப்போம்' என எப்போதோ உறுதி கொடுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. சசிகலா குடும்பத்துக்கு எதிராக எந்த நடவடிக்கைகளையும் வேகப்படுத்தாமல், தன்னுடைய தலைமையை வலுப்படுத்தும் வேலையில் அவர் தீவிரமாக இருக்கிறார். நீரா பானத்துக்கு அனுமதி கொடுத்தது; ஆட்சியின் 100 நாள் சாதனைகளைக் கொண்டாடியது; அரசு அலுவலகங்களில் தன் படத்தை வைக்கச் சொன்னது; ஜெயலலிதா ஆட்சியில் ஒதுக்கி வைக்கப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்குப் பதவி கொடுப்பது எனத் தன்னை முன்னிறுத்தியே செயல்பட்டுவருகிறார். நாளை நடக்க இருக்கும் இஃப்தார் விருந்திலும் தன்னையே அவர் முன்னிலைப்படுத்த இருக்கிறார். இந்த நடவடிக்கைகளை எல்லாம் சசிகலா தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும், சசிகலா தலைமையை நோக்கி எம்எல்ஏ-க்களும் அமைச்சர்கள் வருவார்கள் என இன்னமும் நம்புகின்றனர். இதற்கெல்லாம் வெளிப்படையாகப் பதில் சொல்லும் மனநிலையில் முதல்வர் இல்லை. 'தன்னைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, மோடிக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக அவர் நினைக்கிறார். தினகரன் பின்னால் எந்த நிர்வாகிகளும் செல்ல மாட்டார்கள்' என்பதில் உறுதியாக இருக்கிறார்" என்றார் விரிவாக. 

"நேற்று மீடியாக்களிடம் பேசிய தினகரன், 'கட்சி இணைப்புக்காக இன்னும் 60 நாள்கள் காத்திருப்பேன்' எனப் பேசினார். இதைப் பற்றி தங்களுக்குள் விவாதித்துக்கொண்ட அமைச்சர்கள், 'அணிகள் இணைப்புக்கும் தினகரனுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. கட்சியிலிருந்து அவர் ஒதுங்கியதோடு, அவருடைய அரசியல் வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிட்டது. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்துதான் முடிவெடுக்க வேண்டும். இதில் தினகரனுக்கு எந்த வேலையும் இல்லை. எங்கள் கட்டுப்பாட்டில்தான் எம்எல்ஏ-க்கள் இருக்கிறார்கள் என்பதை வலிந்து காட்ட முற்படுகிறார். இதையெல்லாம் நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை' எனப் பேசியுள்ளனர். வரும் நாள்களில் சசிகலாதான் பொதுச் செயலாளர் எனத் தேர்தல் ஆணையம் அறிவிக்கவும் வாய்ப்பில்லை. ஆட்சி மற்றும் கட்சியில் சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதற்கும் வாய்ப்பில்லை" என்கின்றனர் கொங்கு மண்டல நிர்வாகிகள்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close