Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாட்டிறைச்சி விவகாரம்: முதல்வர் அளித்த பதிலும் தி.மு.க ரியாக்‌ஷனும்!

இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து  தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. 

mk stalin


மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு செயல்படும். தமிழகத்தில் பசுவதை தடுப்புச் சட்டம் 40 ஆண்டுகாலமாகவே நடைமுறையில் உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர்தான் தமிழக அரசு முடிவெடுக்கும்’ என்று பதிலளித்தார்.

congress


முதல்வர் அளித்த பதிலில் திருப்தியில்லை எனக் கூறி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தன. சட்டப்பேரவைக்கு வெளியே பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், ‘மாட்டிறைச்சித் தடை விவகாரத்தில் முதலமைச்சரின் பதில் திருப்தியளிக்கவில்லை. தமிழக அரசு மத்திய அரசுக்கு அடிப்பணிந்து செயல்படுகிறது’ என்று குற்றம்சாட்டினார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close