Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை அழைத்து வரப்பட்டார் சுதாகரன்! அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரனை, அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சென்னை எழும்பூரிலுள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் கர்நாடகக் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இதையடுத்து சுதாகரன்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

சூப்பர் டூப்பர் டிவி தொடர்பாக 2002ஆம் ஆண்டு அமலாக்கத்துறையினர் சுதாகரன், பாஸ்கரன் ஆகியோர்மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் விசாரணை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, பாஸ்கரன் நேரில் ஆஜரானார். சுதாகரன் ஆஜராகவில்லை.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கின் அடுத்த விசாரணையின்போது சுதாகரன் நேரில் ஆஜராக வேண்டும் என்று வாரன்ட் பிறப்பித்து கர்நாடக சிறைத்துறைக்கு அனுப்பப்பட உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவையும் மீறி‌ சுதாகரன் ஆஜராகவில்லை. இதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதி, சுதாகரன் ஏன் ஆஜராகவில்லை எனக் கேள்வி எழுப்பினார். எனவே, சுதாகரனுக்கு மீண்டும் வாரன்ட் பிறப்பித்த நீதிபதி, ஜூன் 20ஆம் தேதி கண்டிப்பாக சுதாகரனை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார்.

அதன்படி இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களுரூ பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரனைக் கர்நாடகக் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், பாஸ்கரனும் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது இருவரும், தன் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என்று தெரிவித்தனர். இதையடுத்து, இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close