Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜனாதிபதி தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர் பரிசீலனையில் மீரா குமார், சுஷில் குமார் ஷிண்டே!

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பரிசீலனையில் மீரா குமார், சுஷில் குமார் ஷிண்டே பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள்

இந்தியக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் ஜூலை 17-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பீகார் மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாஜக வேட்பாளரை எதிர்த்து எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவேட்பாளரைக் களம் இறக்கத் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு பெரிதாக நிலவிவருகிறது. 

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷில் குமார் ஷிண்டே இருவரின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரில் ஒருவர் எதிர்கட்சிகளின் ஆதவுடன் பொது வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close