Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆம்புலன்ஸ் வேணுமா...அப்போ ஆதார் வேணும்..! அடுத்த அதிரடியில் உ.பி. அரசு

ஆம்புலன்ஸ்

ந்தியாவில் இப்போது, எதைச் செய்ய வேண்டுமென்றாலும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இப்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில், 'ஆம்புலன்ஸ் சேவை பெற ஆதார் கார்டு முக்கியமானது' என்று அரசு அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் பல இடங்களில், இக்கட்டான நேரங்களில் ஆம்புலன்ஸ் சேவை நிராகரிக்கப்படுகிறது. இதைத் தடுக்கும் நோக்கத்தில், அந்த மாநில அரசு ஆதார் கார்டுமூலம் ஆம்புலன்ஸ் தேவையைப் பதிவுசெய்யத் திட்டம் அறிவித்துள்ளது. ஆம்புலன்ஸ் சேவை கேட்டு குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும்போது, பதிவு செய்தவரோ அல்லது அவரின் உறவினரோ ஆதார் கார்டை அந்த டிரைவரிடம் காட்ட வேண்டும். டிரைவர்கள், தங்கள் வாகனங்களின் எரிபொருளை மிச்சப்படுத்த சில பயணங்களை மேற்கொள்வதில்லை. இதனால், ஆதார் கார்டை கட்டாயமாக்கியுள்ளது உ.பி அரசு.

ஆம்புலன்ஸ் சேவை தரப்படாததால், இறந்துகிடந்த தன்னுடைய 15 வயது மகனை தோளில் சுமந்துசென்றார் ஒருவர். அதேபோல ஆம்புலன்ஸுக்கு எரிபொருள் வழங்க அந்த நபரிடம் பணம் இல்லாததால், ஆம்புலன்ஸ் அளிக்கப்படவில்லை. இதனால், 7 வயது சிறுமியை சைக்கிளில் வைத்துக்கொண்டு சென்றுள்ளார் மற்றொருவர். இதுபோன்று இனி நடக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு உத்தரப்பிரதேச அரசு இதைச் செயல்படுத்த முடிவெடுத்துள்ளது. அதனால், ஆம்புலன்ஸுக்கு ஆதார் அவசியம் என்பதை விரைவில் உ.பி. அறிமுகம் செய்ய உள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close