Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் எப்-16 தயாரிப்பு ; டாடா- லாக்கீட் மார்ட்டின் ஒப்பந்தம்!

ந்தியாவிலேயே எப்-16 ரக போர் விமானங்களைத் தயாரிக்கும் வகையில், லாக்கீட் மார்ட்டின் நிறுவனம், டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம்செய்துள்ளது. 

அமெரிக்காவின் லாக்கீட் மார்ட்டின் நிறுவனம், உலகின் அதி நவீன போர் விமானமாகக் கருதப்படும் எப்- 16 ரக போர் விமானங்களைத் தயாரித்துவருகிறது. டெக்சாஸ் மாகாணத்தில் ஃபோர்ட் வொர்த் என்ற இடத்தில் உற்பத்தி மையம் அமைந்திருக்கிறது. இந்திய விமானப்படையில் உள்ள பழைமையான ரஷ்யத் தயாரிப்புப் போர் விமானங்களை நீக்கிவிட்டு, அமெரிக்கத் தயாரிப்புப் போர் விமானங்களை அதிகரிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

'மேக் இன் இந்தியா ' திட்டத்தின் கீழ், இந்தியாவில் போர் விமான உற்பத்தியில் ஈடுபட வருமாறு லாக்கீட் மார்ட்டின் நிறுவனத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். வரும்  26 ஆம் தேதி, மோடி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில்,  லாக்கீட் மார்ட்டின் நிறுவனம் இந்தியாவிலேயே எப்-16 ரக போர் விமானத் தயாரிப்பு மையத்தை அமைப்பதற்காக, டாடா அட்வான்ஸ் சிஸ்டம் நிறுவனத்துடன் ஒப்பந்தம்செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 

அதன்படி, எப்-16 போர் விமானத்தின் அதி நவீன பிளாக் 70 ரக விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். 'இந்த ஒப்பந்தம் வாயிலாக, 'எப் -16 ரக போர் விமானங்களை உலகுக்கு ஏற்றுமதிசெய்யும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது' என இரு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 26 நாட்டு விமானப்படைகளில் 3,200 எப்.-16 ரக போர் விமானங்கள் உள்ளன.   

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close