Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆகஸ்டில் வெளியாகும் துல்கர் சல்மானின் அடுத்த படம்!

'வாயைமூடி பேசவும்', 'ஓகே கண்மணி' ஆகிய படங்களின் மூலம் தமிழில் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார் நடிகர் துல்கர் சல்மான். அதைத்தொடர்ந்து மலையாளத்தில் 'சார்லி', 'கலி', 'கம்மாட்டிபாடம்', 'ஜோமோன்டே சுவிஷேசங்கள்', 'காம்ரேட் இன் அமெரிக்கா' ஆகிய படங்களின் மூலம் அங்கும் பிஸியாகிவிட்டார். 

துல்கர்

தற்போது 'டேவிட்' பட இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கும் 'சோலோ' படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார் துல்கர். தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் தயாராகியிருக்கிறது இந்தப் படம். நாசர், பார்த்திபன், ஆர்த்தி வெங்கடேஷ், ஸ்ருதி ஹரிஹரன், தன்ஷிகா, நேஹா ஷர்மா எனப் பலரும் நடிக்கும் இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close