Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாகன ஓட்டிகளுக்குக் கெடுபிடி... ஹெல்மெட், அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்!

வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவதோடு அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட்

போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான சாலை பாதுகாப்புக் குழு ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சாலை பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற சாலை பாதுகாப்பு குழுவின் பரிந்துரையை ஏற்று வாகன ஓட்டிகளுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 'வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் எனவும், சோதனை ஆய்வின்போது அதைக் காண்பிக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், காப்பீட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்கள் சிறைப்பிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே வாகனத்தை அதிவேகமாக இயக்குதல், சிவப்பு விளக்கைத் தாண்டுதல், குடித்துவிட்டு வாகனத்தை இயக்குதல், வாகனத்தை ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தல், சரக்கு வாகனங்களில் அதிக பாரம் மற்றும் அதிக ஆட்களை ஏற்றுதல் ஆகிய விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களின் உரிமங்களைத் தற்காலிக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close