Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உள்வாடகைக்கு விட்டது அரசியல்வாதிகளா? அதிகாரிகளா? குடிசை மாற்று வாரியத்தின் தில்லாலங்கடி 


தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் வசித்து வரும் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் திங்கள்கிழமை அன்று தஞ்சை மாவட்ட கலெக்டரை மனுநீதி முகாமில் சந்தித்து, 'நாங்கள் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் குடியிருந்து வருகிறோம். திடீரென்று எங்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி ஆள் வைத்து மிரட்டுகிறார்கள் அதிகாரிகள்' என்ற கோரிக்கை மனுவை அளித்தனர். 

அவர்களிடம் பேசினோம், 'நாங்கள் அன்றாடம் வேலை செய்து பிழைப்பவர்கள். எங்களுக்குச் சொந்த வீடு கிடையாது. ஆனால், இந்தக் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் உள்வாடகைக்குக் குடியிருந்து வருகிறோம். எங்களை இப்போது திடீரென்று வெளியே போங்கள் என்று சொல்லி அனுப்பினால் நாங்கள் எங்கே போவது. உள்வாடகையாக மாதம் 500 ரூபாய் வாடகை கொடுத்து வருகிறோம். திடீரென்று நான்காயிரம், ஐந்தாயிரம் வாடகைக்கு வெளியில் போய் குடியிருக்க எங்களால் எப்படி முடியும். அந்த அளவுக்கு நாங்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் கிடையாது.  

பெரும்பாலும் இங்கு வாழ்கிறவர்கள் கணவனை இழந்தவர்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள்தான். அன்றாடம் 100 ரூபாய்க்குக் கூட வேலைக்குப் போக முடியாத வயதானவர்களும் குடியிருந்து வருகிறார்கள். இப்படி ஈவு இரக்கமே இல்லாமல் வெளியேறச் சொல்லி எங்களை ஆள் வைத்து மிரட்டுகிறார்கள் அதிகாரிகள். குறைந்தது எங்களுக்கு ஆறு மாதமாவது அவகாசம் கொடுத்தால் நாங்களே வேறு இடத்துக்குச் சென்றுவிடுவோம்' என்றார்கள்.

'குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் குடியிருக்க முறையாக விண்ணப்பித்து, ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் மட்டுமே குடியிருக்க முடியும். அவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டால் எங்களிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டுச் செல்ல வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல் வீட்டை உள்வாடகைக்கு விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். அவர்களைத்தான் நாங்கள் வீட்டைவிட்டு வெளியேறச் சொல்லுகிறோம்' என்கிறார்கள் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள். 

ஆனால், அப்பகுதியில் குடியிருந்து வரும் இன்னும் சிலர், 'இந்தக் குடியிருப்புகள் முழுக்க முழுக்க அரசியல்வாதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள்தான் உள்வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். அவர்கள்தான் இப்போது அதிக வாடகை கேட்டு வீட்டைவிட்டு வெளியேறச் சொல்லுகிறார்கள். இந்த விசயம் அதிகாரிகளுக்குத் தெரியாது' என்றனர்.  

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close