Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேளாண்மை இணை இயக்குநருக்கு எதிராக கிருஷ்ணகிரியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா சிலை எதிரில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரைப் பணி நீக்கம் செய்யவும் அவர் மீதான ஊழல்கள் குறித்து விசாரணை செய்யவும் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்குத் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தலைமை வகித்துப் பேசியதாவது:

மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர், மத்திய, மாநில அரசுகள் தரும் திட்டங்களில் கீழ்மட்ட அதிகாரிகளை மிரட்டி, ஒவ்வொரு திட்டத்திலும் பயனாளிகளிடம் 30 முதல் 50 சதவிகிதம் வரை மானியத்தில் லஞ்சமாகப் பெற்றுள்ளார். அதிகாரிகளைப் பணத்தை வசூல் செய்யும்படி அவர் கட்டாயப்படுத்தியுள்ளார். அவர்மீது பல்வேறு புகார்கள் உள்ளன. அவர்மீது அரசுக்குப் பல புகார்கள் கொடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அவரைப் பணி நீக்கம் செய்து, புலனாய்வுத் துறையைக் கொண்டு முழு விசாரணை நடத்திட வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் முழக்கமிட்டனர்.

 
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close