Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மீது அமெரிக்கர் வழக்குப் பதிவு!

உலகின் முன்னணி ஐடி நிறுவனமும் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமுமான இன்ஃபோசிஸ் மீது அமெரிக்கர் ஒருவர், டெக்சாஸ் கிழக்கு மாகாணம் கீழ் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார். 

இன்ஃபோசிஸ்

எரிக் க்ரீன் என்பவர் பதிவுசெய்துள்ள இந்த வழக்கில், இன்ஃபோசிஸ் நிர்வாகம் ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். அவர், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 2011 அக்டோபரிலிருந்து 2016 ஜூன் 28 வரை இமிக்ரேஷன் (immigration) பிரிவு தலைவராகப் பணி புரிந்தவர். இவர் பணி செய்த காலத்தில், நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டதாகவும், முன்னுரிமைகள் சலுகைகள் அனைத்தையும் தெற்கு ஆசிய மக்களுக்கே தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

தெற்கு ஆசியர்களைத் தவிர்த்து, பிறருக்குப் போதுமான முன்னுரிமைகளோ வாய்ப்புகளோ தருவதில்லை என்றும் தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளார். அதன் காரணமாகவே, தன்னை வேலையை விட்டு நீக்கினார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 

இன்ஃபோசிஸ் நிறுவனம், விசா விவகாரம், துறை வளர்ச்சியில் தொய்வு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவரும் நிலையில், இந்த வழக்கு அந்த நிறுவனத்துக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close