Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இதனால்தான் காங்கிரஸ் அழிந்தது'... பா.ஜ.க-வை எச்சரிக்கும் அ.தி.மு.க அமைச்சர்!

பா.ஜ.க அரசு ஆட்சியமைத்தது முதல் இந்தித் திணிப்பை மேற்கொண்டு வருகிறது. இதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. தமிழகத்திலும் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்தித் திணிப்புக்கு எதிராக அ.தி.மு.க அமைச்சர் செல்லூர் ராஜு கருத்துத் தெரிவித்துள்ளார்.

Sellur Raju


இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, "தமிழக அரசு மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் குறித்து ஸ்டாலின் தொடர்ந்து குறை கூறிக்கொண்டு வருகிறார். ஸ்டாலினின் தந்தை என்ன பெரிய தொழில் அதிபரா. அவருக்கு கார், பங்களா உள்ளிட்ட சொத்துகள் எப்படி வந்தன. தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ரவுடிகள் ஆட்சிதான் நடக்கும். நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படும்.

மத்திய அரசு இந்தித் திணிப்பை மேற்கொள்ளக் கூடாது. இதேபோன்று முயன்றுதான் காங்கிரஸ் அழிந்தது. அ.தி.மு.க அரசு எப்போதும் இந்தித் திணிப்பை அனுமதிக்காது. இரு அணிகள் இணைய வேண்டும் என்றுதான் தொண்டர்கள் நினைக்கின்றனர். ஏற்கெனவே கூறியபடி யாரும் அடிமையும் இல்லை, அரசனும் இல்லை" என்று கூறியுள்ளார்.

அதேபோல, இந்தித் திணிப்புக்கு எதிராக அ.தி.மு.க எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close