Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இதில் கவனம் செலுத்துங்கள்! பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மு.க.ஸ்டாலின்

நதிநீர் இணைப்பு தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நதிநீர் பிரச்னையால் தமிழகம் மோசமான சூழ்நிலையில் உள்ளது என்றும் தடுப்பணை கட்டுவது அண்டை மாநிலங்களின் எதேச்சதிகாரமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2007-ம் ஆண்டு நடந்த தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில், நதிநீர் இணைப்பு பற்றி கருணாநிதி பேசியுள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், விவசாயத்தைக் காப்பாற்ற நதிநீர் இணைப்பு மட்டுமே காலத்தின் கட்டாயமாக உள்ளது என்றும் நதிநீர் இணைப்புத் திட்டத்தில் பிரதமர் மோடி கவனம்செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நல்லகண்ணுவுடன் சந்திப்பு

இதனிடையே, சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணுவை மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற உள்ள முரசொலி பவள விழாவில் பங்கேற்கும்படி நல்லகண்ணுக்கு அழைப்பு விடுத்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close