Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லஞ்சம் கேட்பதாக வழக்கு! 1,577 பணியிடங்களுக்கு நடந்த தேர்வை ரத்துசெய்தது தமிழக அரசு

chennai high court

கால்நடை உதவியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ள தமிழக அரசு, 1,577 பணியிடங்களுக்கு நடந்த தேர்வை ரத்து செய்யப்பட்டுவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

1,577 கால்நடை உதவியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாகத் திருவாரூரைச் சேர்ந்த கிருத்திகா மற்றும் அருண்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், கால்நடை உதவியாளர்கள் பணிக்கு லஞ்சம் கேட்கப்படுவதாகவும் சகாயம் போன்ற அதிகாரி தலைமையில் குழு அமைத்து பணிநியமனம் செய்ய வேண்டும் என்றும் மாவட்ட அளவிலான ரோஸ்டர் முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கால்நடை உதவியாளர் தேர்வு நியமன நடைமுறைகளை ரத்து செய்துவிட்டதாகவும், 1,577 பணியிடங்களுக்கு நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கால்நடை உதவியாளர் பணிக்கு மீண்டும் தேர்வு நடைபெறும் என்றும், ஏற்கெனவே நடைபெற்ற நியமனத்தில் சில குறைபாடுகள் இருந்தன என்றும் மாநில அளவிலான முறைக்குப் பதில் மாவட்ட அளவிலான முறையைக் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close