Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் குறித்த விழிப்புஉணர்வு பேரணி!

கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் குறித்த விழிப்புஉணர்வுப் பேரணி நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், 10 ஒன்றியங்களில் 6 முதல் 18 வயதுடைய மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் வகையில், கிருஷ்ணகிரி வட்டார வள மையம் சார்பில் கட்டிகானப்பள்ளி புதூரில் நடந்த பேரணியைத் தாசில்தார் மோகனசுந்தரம் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.


இந்தப் பேரணி கட்டிகானப்பள்ளிபுதூர், புதிய வீட்டு வசதி வாரியம், மாவட்ட விளையாட்டு அரங்கம், ராயக்கோட்டை சாலை வழியாக பேரணி சென்றது. பேரணிக்கு மேற்பார்வையாளர் செவிலியர் ராணி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், கண்காணிப்பாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்றுநர் ஆர்த்தி சிறப்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் மருத்துவ முகாம் குறித்த விழிப்புஉணர்வு பிரசுரங்களை, முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி பொதுமக்களிடம் வழங்கினார்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வட்டார வள மையங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 3-ம் தேதி கிருஷ்ணகிரியிலும், 4-ம் தேதி கெலமங்கலத்திலும், 5-ம் தேதி மத்தூரிலும், 6-ம் தேதி பர்கூரிலும், 7-ம் தேதி தளியிலும், 10-ம் தேதி சூளகிரியிலும், 11-ம் தேதி ஊத்தங்கரையிலும், 12-ம் தேதி காவேரிப்பட்டினத்திலும், 13-ம் தேதி ஓசூரிலும், 14-ம் தேதி வேப்பனஹள்ளியிலும் முகாம் நடைபெறுகிறது.


முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது ஐந்து புகைப்படம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் வர வேண்டும். இம்முகாமில் பங்கேற்பவர்களுக்கு காதொலிக் கருவி, கண் கண்ணாடி, மூன்று சக்கர வாகனம், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், கல்வி உதவித் தொகை, மாத பராமரிப்புத் தொகை பெற பரிந்துரைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close