Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அ.தி.மு.க.வில் தற்போது தலைவர் என்று யாருமில்லை!' – அமைச்சரின் அடடே விளக்கம்

'அ.தி.மு.க.வில் தற்போது தலைவர் என்று யாருமே இல்லை' என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கொடுத்துள்ள விளக்கம் புதுரகம்.

திருச்சி ஶ்ரீஉறையூர் வெக்காளியம்மன் திருக்கோயில் திருமண மண்டபத்தில் பூசாரிகளுக்கு பூஜை செய்யத் தேவையான உபகரணங்களைச் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் வழங்கினார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் இராசாமணி தலைமை வகித்த இந்நிகழ்வில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் முல்லை, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராமு, மாவட்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கித் தலைவர் பத்மநாதன், முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ராஜா, பூபதி, மலைக்கோட்டை ஐயப்பன், முஸ்தபா, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

அமைச்சர்இந்த விழாவில் பூசாரிகளுக்குப் பூஜை செய்யத் தேவையான உபகரணங்களை வழங்கிய அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன்,

“ஜெயலலிதா, திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு, கிராமப்புறங்களில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் அமைந்துள்ள திருக்கோயில்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் திருக்கோயில்களுக்கு முறையாகப் பூஜை செய்திட  பூசாரிகளுக்குப்  பித்தளைத் தாம்பாளம், தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு, தொங்கு விளக்கு ஆகிய பூஜைக்குத் தேவையான பொருள்கள் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

அதன்படி, இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள 357 சைவத் திருக்கோயில்களுக்கும், 33 வைணவ திருக்கோயில்களுக்கும் என மொத்தம் 390 திருக்கோயில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருச்சிராப்பள்ளி மேற்கு, இலால்குடி, முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர், மணப்பாறை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 100 பூசாரிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்படுகிறது'' என்றார்.

 

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,

அமைச்சர் தற்போது அ.தி.மு.க அணிகளாகப் பிரிந்து கிடக்கிறதே, கட்சிக்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்கிற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், 'நம்ம கட்சிக்குத் தலைவர் என யாரும் இல்லை. முதலில் கட்சிக்குத் தலைவராக எம்.ஜி.ஆர் இருந்தார். அடுத்து அவர் வழியில் ஜெயலலிதா எங்களை வழிநடத்தினார். தற்போது தலைவர் யாரும் இல்லை. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆன்மாதான் எங்களை வழிநடத்துகிறது' என்றவரிடம், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க அணிகளாகப் பிரிந்துள்ளது. தற்போது மேலும் அணிகள் பிரியக்கூடும் எனக் கூறப்படுகிறதே என்கிற கேள்வியைப் பத்திரிகையாளர்கள் முன் வைக்க, பெரிய கும்பிடு போட்டபடி  அமைச்சர் அங்கிருந்து கிளம்பினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close