Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெதர்லாந்து மக்களின் பிரதான வாகனத்துடன் டெல்லி வந்த மோடி!

பிரதமர் மோடியின் மூன்று நாடுகள் சுற்றுப்பயணத் திட்டத்தில், ஐரோப்பாவின் பணக்கார நாடான நெதர்லாந்தும் இருந்தது. அந்தச் சிறிய  நாட்டில், நீர்வழிப் போக்குவரத்துதான் பிரதானம். வீட்டுக்குவீடு படகு வைத்திருப்பார்கள். மற்றொரு முக்கிய வாகனம், சைக்கிள். இங்கு 36 சதவிகித மக்கள், சைக்கிளில் செல்வதையே வழக்கமாகக்கொண்டவர்கள். ஏன், அந்த நாட்டுப் பிரதமர் மார்க் ரட்டே கூட அலுவலகத்துக்கு சைக்கிளில்தான் செல்வார். ஒரே ஒரு பாதுகாவலர்தான் உடன் இருப்பார். மக்களோ, `முதலமைச்சர் கான்வாய், பிரதமர் கான்வாய், ஜனாதிபதி கான்வாய் என்றால் என்ன' எனக் கேட்கும் ரகம்.

செல்வச்செழிப்பில் கொழிக்கும் இந்த நாட்டின் பிரதமரே அலுவலகத்துக்கு சைக்கிளில் வருவது கண்டு, நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் வரும் உலகத் தலைவர்கள் வியக்கிறார்கள். பிரதமர் மோடியும் அதற்கு விதிவிலக்கல்லவே. நெதர்லாந்து நாட்டுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி , தி ஹேக் நகரில் பிரதமர் மார்க் ரட்டேவைச் சந்தித்தார். அப்போது, மார்க் ரட்டே தன் அலுவலகத்துக்கு சைக்கிளில் செல்வதுகுறித்து மோடி வியப்புத் தெரிவித்தார். பிரபல டச் தயாரிப்பான `பெட்வுஸ் சைக்கிளை மோடிக்குப் பரிசளித்தார் நெதர்லாந்துப் பிரதமர்.  அந்த சைக்கிள், எல்இடி பல்பு பொருத்தப்பட்ட டைனமோகொண்டது. 

மோடி, சைக்கிளை ஓட்டுவாரோ இல்லையோ, அதனுடன் நிச்சயமாக போஸ் கொடுப்பார். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், பெட்வுஸ் சைக்கிளுடன் அவரின் போஸ் இடம்பெற்றிருந்தது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close