Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜயபாஸ்கர் விவகாரம்... அறிக்கை கேட்கிறதா மத்திய அரசு?

எம்.டி.எம். குட்கா ஆலையின் ஒரே ஒரு பங்குதாரரிடமிருந்து, ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பல கோடிகள், சென்னை மாநகரக் காவல் ஆணையருக்கு ரூ.60 லட்சம் உட்பட மொத்தம் ரூ.40 கோடி கையூட்டு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் இதை, வருமானவரித்துறை விசாரணையின்போது குட்கா ஆலையின் பங்குதாரரான மாதவராவ் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின.

VijayaBaskar


இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்த விவகாரத்தைச் சட்டப்பேரவையில் எழுப்பியபோது, சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

இதனால், தி.மு.க வெளிநடப்பு செய்தது. இந்நிலையில், குட்கா விற்பனை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிடம் அறிக்கை கேட்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close