Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

ஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைக்கோள், ஏரியன்-5 ராக்கெட் மூலம் ஏவப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

ஜிசாட்-17

இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைக்கோள், இன்று அதிகாலை 2.29 மணிக்கு ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து ஏவப்பட்டது. பின்னர், ஏரியன்-5 ராக்கெட் ஜிசாட்-17 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது. 3,477 கிலோகிராம் எடைகொண்ட இந்த ஜிசாட்-17 செயற்கைக்கோள், தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டது. இந்தியாவின் 18-வது தொலைத்தொடர்பு மேம்பாட்டு செயற்கைக்கோள் 15 வருட ஆயுட்காலம்கொண்டது. அதிக எடைகொண்ட இந்த ஜிசாட்-17 செயற்கைக்கோளை ஏவும் தொழில்நுட்ப அமைப்பு இஸ்ரோ ஏவுதளத்துக்கு இல்லை என்ற காரணத்தினால், ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து ஏவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close