Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பா.ஜ.க. ஆட்சியில் கடனை அடைக்க சித்தாளாக மாறிய யோகா வீராங்கனை!

நாட்டில் இப்போது, யோகா ஆசிரியர்களுக்குதான் மதிப்பு அதிகம். பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்கள்கூட யோகாவை பிரபலப்படுத்த கோதாவில் இறங்கியுள்ளனர். யோகா ஆசிரியர்களின் தேவை அதிகரித்திருக்கிறது என்கிற செய்தி அடிபடும் வேளையில், இந்தியாவுக்காக சர்வதேச யோகா போட்டிகளில் தங்கம் வென்ற வீராங்கனை, வயிற்றுப்பாட்டுக்காக சித்தாள் வேலை செய்துவருகிறார். என்ற அவலச் செய்தியும் வந்துள்ளது.  பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெறும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் அவர் என்பதும் இன்னொரு அதிர்ச்சி.

ராய்ப்பூர் அருகேயுள்ள தாரா கிராமத்தைச் சேர்ந்த தாமினி, மிகச் சிறந்த யோகா வீராங்கனை. நேபாளத்தில் மே மாதம் நடந்த தெற்காசிய அளவிலான யோகா போட்டியில் பங்கேற்று, இந்தியாவுக்காகத் தங்கம் வென்றார். நேபாளத்துக்குச் செல்ல கையில் பணம் இல்லாத நிலையில், வட்டிக்கு கடன் வாங்கித்தான்  போட்டியில் பங்கேற்றார். நாடு திரும்பிய பின்னர் கடனை அடைக்க வேண்டுமே... கடன்காரர்கள் விடுவார்களா. அதனால், சித்தாள் வேலைபார்க்கும் தாயாருடன் சேர்ந்து விடுமுறை நாள்களில் இவரும் சித்தாள்  வேலை செய்கிறார். தினமும் 8 முதல் 10 மணி நேரம் வேலைபார்த்தால், 150 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. 

தாமினியின் தந்தை, மாற்றுத்திறனாளி. தற்போது, பி.காம் முதலாம் ஆண்டு படித்துவரும் தாமினியின் சொந்த ஊரைச் சேர்ந்த அஜய் சந்த்ராகர், சத்தீஸ்கர்  மாநில உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கிறார். கஷ்டஜீவனம் நடத்திவரும் தாமினி, தன் நிலைகுறித்து அமைச்சரிடம் தெரிவித்தும் பலன் பூஜ்யம்தான்.

Photo courtesy: Indian express

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close