Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முனுசாமி, மைத்ரேயன் குடும்பத்துக்குள் அதிமுக சென்றுவிடக்கூடாது! அதிரவைத்த ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

சசிகலா குடும்பத்துக்குள் மட்டுமல்ல, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, மைத்ரேயன் குடும்பத்துக்குள் அதிமுக சென்றுவிடக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம் என்று அதிரடியாகப் பேசியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

தஞ்சையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மூவேந்தர் முன்னணிக் கழகத்தைச் சேர்ந்த எம்.கே.செந்தில், ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கட்சியில் இணையும் விழாவை, தர்மயுத்த இணையும் விழாவாகப் பெயர் சூட்டி, மக்கள் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எனத் தஞ்சை முழுவதும் ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர். இரவோடு இரவாக பேனர்கள் அனைத்தும் கிழிக்கப்பட்டன .

இணைப்பு விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ’இந்த இயக்கம் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் வழிவந்த இயக்கம். ஆகையால் நம்முடைய நோக்கம் தனிப்பட்ட குடும்பத்துக்குள் போய்விடக்கூடாது என்பதுதான். தொண்டர்கள் உருவாக்கி வளர்த்த கட்சி அதிமுக. நாம் தீய சக்திகளை அண்டவிடக்கூடாது. ஒன்றரை லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவை ஒன்றரைக் கோடி உண்மைத் தொண்டர்களைக்கொண்ட கட்சியாக உருவாக்கியவர் அம்மா. மக்களோடு இணைந்து கட்சியைப் பார்த்துப் பார்த்து வளர்த்தவர்கள் புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும். 

மக்களால் மக்களுக்காகவே என்று வாழ்ந்தவர். அப்படிப்பட்டவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத்தான் நாம் சொல்கிறோம். தாய் இல்லாத பிள்ளைகளாக நாம் இருக்கிறோம். ஆகையால் எந்தவொரு குடும்பத்துக்குள்ளும் அதிமுக எனும் மாபெரும் இயக்கம் சென்றுவிடக் கூடாது. அதற்காகத்தான் நாம் தர்மயுத்தத்தை நடத்தி வருகிறோம். சசிகலா குடும்பம் இந்த இயக்கத்தைக் கபளீகரம் செய்ய நினைக்கிறது. அவர்கள் கையில் போய்விடக் கூடாது. இந்தப் பன்னீர்செல்வமாக இருந்தாலும் சரி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனிசாமி, மைத்ரேயன் என யார் குடும்பத்துக்குள்ளும் இந்த இயக்கம் சென்றுவிடக் கூடாது. கட்சிப்பொறுப்புக்கும், ஆட்சி பொறுப்புக்கும் யார் வீட்டு வாசலிலும் போய் நிற்கக் கூடாது. ஜனநாயக முறைப்படி கட்சியும் ஆட்சியும் நடைபெற வேண்டும்' என்று பேசி அதிரவைத்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close