Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிமுக எம்எல்ஏ-யின் தந்தைக்கு எதிராக வழக்கு! தூத்துக்குடி கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஒட்டப்பிடாரம் பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகக் கல் எடுக்கும் அதிமுக எம்.எல்.ஏ-யின் தந்தை மற்றும் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.  அதில் " ஒட்டப்பிடாரம் பகுதியில், ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ-யின் தந்தை ராஜேந்திரன் மற்றும் சகோதரர் விஜயராஜன், அரசின் அனுமதியுடன் கல்குவாரி நடத்தி வருகின்றனர். ஆனால், அரசு மற்றும் புறம்போக்கு பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிமாகக் கற்களை வெட்டி எடுத்து வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியிலுள்ள அருள்மிகு விஸ்வநாதர் கோயில் மற்றும் அருள்மிகு சாஸ்தா கோயில் பகுதிகளிலும் சட்டவிரோதமாகக் கற்களை வெட்டி எடுத்துள்ளனர். இதனால் கோயில்கள் சேதமடைந்துள்ளன. மேலும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட 40 முதல் 60 அடி ஆழத்துக்கு அதிகமாகக் கற்களை வெட்டி எடுக்கின்றனர்.

மேலும், எங்கள் ஊரில் பல நூற்றாண்டுகள் பழமையாக உள்ள வெள்ளைக்கல் கோயிலும், கற்களை எடுக்க அதிக பலம் வாய்ந்த வெடிகளைப் பயன்படுத்தியதால் கோயில் மோசமாக சேதமடைந்துள்ளது. இங்குள்ள கண்மாய்க்கு வரும் நீர்வரத்துப் பாதைகளும் சேதமடைந்துள்ளன. அதில் அரசுக்குக் கோடிக்கணக்கான அளவில் வருவாய் இழப்பை ஏற்படுத்தி சுயலாபம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுச்சொத்தை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுகுறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் அமர்வு, இதுகுறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஜூலை 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close