Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்கள் ஊருக்கு இந்த ஆண்டு பருவமழை எவ்வளவு? #VikatanData

மழைப்பொழிவு

டந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழைகள் பொய்த்துப் போய்விட்டன. அதனால் அதிகமான வறட்சி, கடந்த ஆண்டு பருவமழைக் காலம் தொடங்கி இந்த ஆண்டு கோடை வரை நீடித்தது. தற்போது தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டில் தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக எவ்வளவு மழை இருக்கும் எனத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான கால அளவிற்குப் பொருந்தும். இதற்காக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கிழக்கு பசிபிக் கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்தக் குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட 'மழை மனிதன்’ எனும் கணினி கட்டமைப்பின் மூலம் 2017-ம் ஆண்டிற்கான முன்னறிவிப்பு பெறப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எதிர்பார்க்கப்படும் 60 சதவிகித வாய்ப்பிற்கான மழையளவு கீழே தரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு அறுபத்து ஐந்து சதவிகித மாவட்டங்களில் சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்குப் பருவகாலத்தில் சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள்: சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், சென்னை, ஈரோடு, கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, வேலூர் விழுப்புரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள்.

தென்மேற்குப் பருவகாலத்தில் சராசரி மழையளவைக் காட்டிலும், குறைவான மழை எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள்: இராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், கரூர், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர் மற்றும் அரியலூர்.

சராசரி மழையளவு (நீண்ட கால சராசரி மழையளவிலிருந்து +-19 சதவிகிதம்). சராசரி மழையளவைக் காட்டிலும் குறைவான மழை (நீண்ட கால சராசரி மழையளவிலிருந்து -20 சதவிகிதம் முதல் -59 சதவிகிதம் வரை). சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படும் தற்போதைய வேளாண் தொழில்நுட்பங்களை வானிலை சார்ந்த வேளாண் அறிவுரைகளுடன் பயிர் சாகுபடி மேற்கொள்ளலாம். சராசரி மழையளவைக் காட்டிலும் குறைவான மழை எதிர்பார்க்கப்படும் இடங்களில் பாசன நீர் அளவை பொறுத்து பயிர் சாகுபடி செய்யலாம்.

 

load...

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close