Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போதைப்பொருள் உபயோகிப்பில்லா மாநிலமாகத் தமிழகத்தை மாற்ற வேண்டும்! திருச்சி கலெக்டர் பேச்சு

திருச்சியில் உலக போதைப் பொருள்கள் மற்றும் குழந்தைக் கடத்தல் ஒழிப்பு தின விழிப்புஉணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் இராசாமணி தொடங்கி வைத்தார்.

சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர்.எலிசபெத், டாக்டர் கீதா, தொண்டு நிறுவன நிர்வாகிகள் அன்பாலயம், டி.கே.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் சகிதமாக, உலக போதைப் பொருள்கள் மற்றும் குழந்தைக் கடத்தல் ஒழிப்பு தின விழிப்புஉணர்வு பேரணியைத் திருச்சி மாவட்ட ஆட்சியர்  இராசாமணி தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, திருச்சி ரயில் நிலையம் வரை சென்றது. இந்த விழிப்புஉணர்வு பேரணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

பேரணியைத் தொடங்கி வைத்து பேசிய கலெக்டர் இராசாமணி, 'உலகம் முழுவதும் விபத்து மற்றும் பல்வேறு நோய்கள் மூலம் ஏற்படும் இறப்பைவிட போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. உடனடியாக மரணம் ஏற்படுத்தக் கூடிய 8 வகை நோய்களில் 6 வகையான நோய்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் புற்று நோய், நுரையீரல் பாதிப்பு, இருதய நோய், மலட்டுத் தன்மை, எலும்புப் பாதிப்பு, பக்க வாதம், ரத்தக் கொதிப்பு மற்றும் பசியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது.

புகையிலை சட்ட விதிகளின்படி பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு அபராதம் விதிக்கப்படும். புகையிலை பற்றிய விளம்பர பலகைகளை அப்புறப்படுத்தாமல் இருந்தாலும், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விற்பனை செய்தாலும் அபராதம் விதிக்கப்படும். மேலும், பள்ளி வளாகத்தைச் சுற்றி 100 மீட்டர் அல்லது 300 அடி சுற்றளவில் புகையிலை பொருள்கள் விற்பனை செய்தாலும் சட்டப்படி அபராதம் விதிக்கப்படும். போதைப் பொருள்கள் உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள், பிரச்னைகள் மற்றும் குழந்தைக் கடத்தல் போன்றவற்றை முற்றிலும் நம் சமூகத்திலிருந்து ஒழித்து, போதை பொருள் உபயோகிப்பில்லா மாநிலமாகத் தமிழகத்தை மாற்ற வேண்டும். இதற்குப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பொதுமக்களிடையே அதிகளவில் விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும்', என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close