Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

`தமிழ் சினிமாவை, ஃபைனான்ஷியர் பிடியிலிருந்து காப்பாற்றுவேன்! ' - விஷால் வீரவசனம்

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டுப் பொதுச் செயலாளராக வெற்றிபெற்ற விஷால், அங்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவந்த ஊழியர்கள் அனைவரையும் அடியோடு நீக்கினார். அடுத்து தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் விஷால் வெற்றிபெற்ற பிறகு, சங்கத்தில் 16 ஆண்டுகளாக வேலைபார்த்த நான்கு ஊழியர்களை நீக்கினார். இப்போது ஃபிலிம்சேம்பரில் அடுக்குமாடி தளத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளது. அங்கே தலைவர், செயலாளர், துணைத் தலைவர் போன்றோர் அமர்வதற்கு ஏசி அறைகள் உள்ளன. இந்தச் சங்கம் இயங்குவதற்காக, ஃபிலிம் சேம்பருக்கு மாதா மாதம் குறிப்பிட்ட ஒரு தொகையை வாடகையாகச் செலுத்திவருகிறது.

இப்போது, திடீரென சென்னை தி.நகர் ஜீவா பூங்கா அருகில் உள்ள யோகாம்பாள் தெருவில் புதிதாக ஒரு அபார்ட்மென்ட்டில் சங்கத்துக்காக  மாதம் இரண்டு லட்சம் ரூபாய் வாடகைக்கு இடத்தைப் பிடித்திருக்கின்றனர். பெரிய கார்ப்பரேட் நிறுவனம் பாணியில் சங்கத்தின் பொறுப்பில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பிரமாண்ட ஏ.சி அறை இருக்கிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலைகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம், எதிர்கால நடவடிக்கைகள், ரிலீஸாகத் தடையாக இருக்கும் புதுப்படங்களின் பஞ்சாயத்துகள் எல்லாமே இங்குதான் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கிய காலத்திலிருந்து இப்போதுதான் முதன்முறையாக ஃபிலிம்சேம்பர், யோகாம்பாள் தெரு என இரண்டு இடங்களில்  சங்கம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

விஷால்

 

ஏற்கெனவே இருந்த ஊழியர்களை நீக்கிவிட்டதால், புதிதாக 25 ஊழியர்களைச் சேர்த்திருக்கிறார் விஷால். திருட்டு விசிடி-யைக் கண்டுபிடிக்க தனிக் குழு, திரையரங்குகளில் க்யூப் மாற்றுவது குறித்து கண்டறிய ஒரு குழு என 25 ஊழியர்களையும் தனித்தனியாகப் பிரித்து அந்தந்தப் பணிகளில் ஈடுபடவைக்கத் திட்டம் தீட்டிவருகிறார் விஷால். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலேயே புதிதாக விநியோகஸ்தர்கள் சங்கத்தை உருவாக்கும் வேலையிலும் இறங்கியிருக்கிறார் விஷால். `தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலருக்கும் புதுப்படம் எடுப்பதற்குப் பணம் கொடுக்கும் பிரபலமான ஃபைனான்ஷியர் ஒருவரின் கைகளில் தமிழ் சினிமா மாட்டிக்கொண்டு தவிக்கிறது. அவருடைய பிடியிலிருந்து  தயாரிப்பாளர்களையும் தமிழ் சினிமாவையும் நிச்சயம் நான் காப்பாற்றுவேன்' என்று சூளுரைத்து, விறுவிறுவென பரபரப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் விஷால்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close