Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயிலில் இருக்கும் சசிகலாவின் பெரும் கவலை இதுதான் #Video

சசிகலா

.தி.மு.க பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்து மறைந்த ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. ஜெயலலிதா முதலமைச்சர் ஆவதற்கு முன்பிருந்தே அவருடன் இருந்தவர். ஆரம்பத்தில் ஜெயலலிதா பங்கேற்கும் அ.தி.மு.க பொதுக்கூட்ட வீடியோ கேசட்களைக் கொடுப்பதற்காக போயஸ்கார்டன் சென்றுவந்த அவர், பின்னாளில் ஜெயலலிதாவுடன் நெருக்கமாகி, அவரின் வீட்டு வேலைகளை செய்யத் தொடங்கினார். தொடர்ந்து ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக மாறினார். 2012-ஆம் ஆண்டில், மன்னார்குடி குடும்பத்தையே ஜெயலலிதா ஒதுக்கி வைத்தபோதுகூட, சில மாதங்களில் சசிகலா மன்னிப்புக்கடிதம் அளித்ததும் போயஸ்கார்டனுக்குள் அவரை மட்டும் அனுமதித்தார். அன்றுமுதல் ஜெயலலிதா இறக்கும்வரை அவருடன் இருந்த ஒரே மன்னார்குடியைச் சேர்ந்த நபர் சசிகலாதான்.

'அ.தி.மு.க-வில் தனக்கு எந்தப்பொறுப்பும் வேண்டாம்' என்று சொன்னவர், ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார். சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்கள் அனைத்தும் போயஸ்கார்டனுக்குள் வந்தனர். அடுத்தகட்டமாக, தமிழக முதல்வராக வேண்டும் என்ற நோக்கில், சசிகலா அடியெடுத்து வைத்த நேரத்தில்தான், அவருக்கு எதிரான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வந்தது. ஜெயலலிதா உள்பட நான்கு பேரையும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்ததுடன், சிறப்பு நீதிமன்றம் அளித்த நான்கு ஆண்டு சிறைத்தண்டனையை உறுதிசெய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். சசிகலாவுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், அ.தி.மு.க-வை யார் வழிநடத்துவது என்ற கேள்வி எழுந்தபோது, தனது அக்காள் மகள் டி.டி.வி. தினகரனைக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக அறிவித்தார் சசிகலா. இன்னமும் சசிகலா தலைமையின் கீழ்தான் தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் செயல்படுகிறார்களா? சசிகலாவின் முன்னேற்றத்தைத் தடுக்கவே உச்சநீதிமன்றம் விரைவாகத் தீர்ப்பு வழங்கியதா? சசிகலா மீண்டும் முதலமைச்சர் ஆக முடியுமா? அவருக்கு அதுபோன்ற எண்ணம் உள்ளதா அல்லது தனது  உடல்நிலை பற்றிய கவலைதான் அதிகமாக உள்ளதா? இவை பற்றியெல்லாம் தெரிந்து கொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்...

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close