Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக நடிகர் சிவமணி கைது!

கடலூரில் கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்துக்காகத் திரைப்பட நடிகர் சிவமணியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவமணியிடமிருந்து லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் ’திட்டமிட்ட படி’ என்னும் திரைபடத்தைத் தயாரித்து நடித்து வருகிறார்.

sivamani

 "கடலூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கட்டாயம் குண்டர் சட்டம் பாயும்" என்று சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார். ஆனால், எலந்தம்பட்டு கிராமம் கெடிலம் ஆற்றில் சட்டத்துக்கு புறம்பாக மினி குவாரியே நடத்திவரும் சிவமணியை கைது செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி போராட்டம் செய்தனர் அரசியல் கட்சி தலைவர்கள்.

 இந்நிலையில், நேற்று இரவு சென்னையில் காவல் துறையால் கைது செய்யப்பட்டார் சிவமணி. ஏரிப்பாளையம் கிராமத்தைச்சேர்ந்த இவர், "திட்டமிட்டபடி " என்ற  திரைப்படம் எடுத்து வருகிறார். இவர் மீது மண்ணுளி பாம்பு கடத்தியது, மணல் கொள்ளை என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. " எலந்தம்பட்டு, கீழிருப்பு, செம்மேடு, காமாட்சிபேட்டை, திருவாமூர் என முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வாழ்வாதாரமே இந்த கெடிலம் ஆறுதான். 

இந்த ஆற்றுக்குள் சட்டவிரோதமாக பல கிலோமீட்டர் தூரத்துக்கு பாதை அமைத்து ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பத்தடிமான ஆழத்துக்கு, 100 கோடி ரூபாய்க்குமேல் மதிப்பிலான மணலை சுரண்டி கொள்ளையடித்ததாக சிவமணி மேல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

இதற்காக கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை கோடிக்கணக்கான பணத்தை வாரி இறைத்ததால் பொதுப்பணித்துறை, வருவாய்துறை, காவல்துறை என எல்லோரும் கைகட்டி துணை நின்றார்கள். இதனை தட்டிகேட்ட பொதுமக்கள் மத்தியில் சாதி கலவரத்தை உண்டாக்கி பல வீடுகளையும் எரித்துள்ளதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ”பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். ஆதாரப்பூர்வமாக கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்கள். அதற்காக இரவு நேரத்தில் கிராம மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு ஆற்றுக்குள் இறங்கி மணல் அள்ளுவதை தடுத்தோம். அப்போது எங்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி செய்தார்கள். அப்போது உயிரை பணயம் வைத்து அந்த லாரிகளை மடக்கி பிடித்து கொடுத்தோம். கண்துடைப்பாக ஒரு வழக்கு போட்டு சிவமணியை தப்பிக்க வைத்துவிட்டார்கள். மணலில் கொள்ளையடித்த பணத்தை இப்போது சினிமா துறையில் முதலீடு செய்திருக்கிறார் சிவமணி. இப்போது கைது செய்திருப்பது நல்ல விஷயம் என்றாலும், எங்களை பொறுத்தவரை இது ரொம்ப லேட்" என்கிறார்கள்.
 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close