Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு?

தமிழக டிஜிபி-யாக இருக்கும் டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு, இன்று மாலை அல்லது நாளை வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழகக் காவல்துறையின் தலைமை இயக்குநராக இருந்த அசோக்குமார், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாயமாகப் பதவி விலக்கப்பட்டார். அதன் பின்னர், அவருக்குப் பதிலாக புதிய தலைமை இயக்குநர் நியமிக்கப்படவில்லை. கடந்த 10 மாதங்களாக காவல்துறை தலைமை இயக்குநர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

அதிகாரிகளின் பணி அனுபவத்தில் மிகவும் இளையவர் என்று கூறப்படும் டி.கே.ராஜேந்திரன், உளவுப் பிரிவின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டு, சட்டம் - ஒழுங்கு பிரிவு தலைமை இயக்குநர் பதவி, அவருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இன்றுடன் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், அவருக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடிவுசெய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு, இன்று மாலை அல்லது நாளை வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழக காவல்துறையின் முக்கியப் பதவியான சட்டம் - ஒழுங்கு டிஜிபி-யைக் கைப்பற்றுவதில் டிஜிபி சட்டம் - ஒழுங்கு பொறுப்பிலிருக்கும் டி.கே.ராஜேந்திரனுக்கும், சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜுக்கும் இடையே போட்டி நிலவிவந்ததாகக் கூறப்பட்ட நிலையில், டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்படயிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close